கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றக்கு அழைத்து செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது, குற்றம் சுமத்தப்பட்ட தரப்பே தன்னை விசாரித்து நீதி வழங்குவது முரணானது என்பது நிருபணமாகியுள்ளதாக பிணையில் விடுதலையான பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.