தமது அரசாங்க ஆட்சியின் கீழ் பிணை இன்றி கடன் வழங்கும் அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் முயற்சியான்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு அடிப்படை மூலதனத்தை பெற்றுக்கொள்ள பிணை இல்லாத கடன் வழங்கும் நோக்கில் புதிய வங்கி நிறுவப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் இளைஞர் சமூகத்திற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பகுதியில் நடைபெற்ற இளைஞர் மாநாடு ஒன்றில் அனுரகுமார திஸாநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.