யுத்திய – 2 நடவடிக்கையுடன் இணைந்து நேற்று (04) காலை அம்பலாங்கொட பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-172-1024x576.png)
அந்த நடவடிக்கையில், பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது செய்துள்ளனர்.