ஜப்பானில் இளம் பெண்களிடையே தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் Solo Wedding என்பது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.
மாப்பிள்ளை இல்லாத இந்த புது திருமண ட்ரெண்டில், திருமண வைபவம் அனைத்து விதமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் நடத்தப்பட்டு வருகிறது.
சில இளம் பெண்கள் அதை தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
அடல்ட் வீடியோ நட்சத்திரமான மன சகுரா இந்த ட்ரெண்டின் முன்னோடி ஆவார். அவர் மார்ச் 2019-இல் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.
“நான் என் சொந்த வாழ்க்கையை மதிக்கிறேன். ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சரி, நான் எப்போதும் என்னை நேசிப்பேன், மகிழ்ச்சியாக இருப்பேன்”என்று அவர் சபதம் எடுத்துக்கொண்டார்.
ஹனோகா என்ற இளம் பெண்ணும் தன்னைத் தானே மணந்தார். “என்னையேத் திருமணம் செய்துகொள்வது, நான் ஒரு மனிதனை மணக்க விரும்பவில்லை என்று அர்த்தமல்ல” என்று அவர் கூறுகிறார்.
பெண்கள் தன்னையே திருமணம் செய்து கொள்வது ஒரு பாக்கியம் என்று கூறியுள்ளார்.
மறுபுறம், ஜப்பானிய அரசாங்க புள்ளிவிவரங்கள் பாரம்பரிய திருமணங்கள் குறைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.
ஜப்பானில் சுமார் 500,000 Solo Wedding திருமணங்கள் நடைபெற்றதாக ஜப்பானிய அரசாங்கத் தகவல்கள் காட்டுகிறது.
இதுபோன்ற திருமணங்களால், single economy வளர்ச்சியடைந்துள்ளது, மேலும் Solo Wedding திருமணத் தொழிலுக்கு லாபகரமான புதிய சந்தையாக மாறியுள்ளன. பெண்கள் தனியாக ஹனிமூன் செல்லவும் தொடங்கிவிட்டனர்.