பாராளுமன்ற நடவடிக்கை பிரதிப சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (11) இடம்பெறவுள்ளது.
சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தை இன்று (11) நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.