ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடாக 5 8 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு மேலும் ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர், மைத்ரிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.