அதிபர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன.
இது தவிர, ஏழு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அதிபர்களும், பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதில்லை எனவும் தீர்மானித்துள்ளனர்.
அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை குறுகிய கால தீர்வாக, பெண் அதிபர்களுக்கு அதிபர் கொடுப்பனவு 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சம்பள பிரச்சனைக்கு தீர்வு காண கோரி ஆசிரியர் சங்கங்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.