இலங்கையில் அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அனுராதபுரத்திற்கும் கந்தளேவிற்கும் இடையில் இன்று (16) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிடுகிறது.
இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதபடுகின்றது.