வைத்தியரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மருந்துகள், போதைக்கு அடிமையானவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், தனியார் வைத்தியசாலை ஒன்றின், மருந்தாளர், தாதி மற்றும் காசாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வலன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, சப்புகஸ்கந்த பிரதேச மருத்துவமனையிலிருந்து போதைக்கு அடிமையானவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மாத்திரைகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து வகையான வலிநிவாரணி மருந்துகளுடன் கூடிய 601 மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போது, இந்த போதைப்பொருட்களை இவர்கள் மொத்தமாக விற்பனை செய்து வருவது தெரியவந்துதுள்ளது.
இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இம்மாதம் 26ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.