கண்டி, பிலிமத்தலாவை, பரகட வெல்ல பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் கடந்த 22ஆம் திகதி மதியம் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் 23ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் தாயார் உதவி அதிபர் எனவும் அவரும் ஏனைய இரு பிள்ளைகளும் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இல்லை எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்த மாணவன் சுமார் 02 மாதங்களை வீட்டிலேயே கழித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.கசுன் ஏகநாயக்கவினால் சடலத்தின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் மற்றும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக இலவசமாக சேவை செய்ய அமைப்புகள் உள்ளன.
தேசிய மனநல உதவி எண் 1926
சுமித்ரயோ : +94 11 2 682535/+94 11 2 682570
சிசிசிலைன் அமைப்பு : 1333