யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.
நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் தீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில் குறித்த பெண் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை எதிரில் வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மானிப்பாய் காவல்துறையினர் கனரக வாகனம் செலுத்தி சென்ற சாரதிக்கு பதிலாக வேறொருவரை கைது செய்து வழக்கினை திசை மாற்றுவதற்கு முயற்சிப்பதாக அங்கு கூடிய பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.