சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று (26) அத்துருகிரியவிலுள்ள விஜேதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் வந்திறங்கியிருக்கிறார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மைத்ரிபால சிறிசேனவிடம் வினவியபோது,
தேர்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அந்தச் சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது முச்சக்கரவண்டியில் வந்ததாகத் தெரிவித்தார்.