ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிடலின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனை தெற்கு பிரதேச பிரிவில் நவீனமயமாக்கல் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விவசாய சங்கங்கள் தங்களுடைய மரக்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து நல்ல விலையைப் பெற முடியும் வகையில் மண்முனை தெற்கில் குளிர்சாதனக் கிடங்குகள் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்க கொண்டமை குறிப்பிடத்தக்கது.