Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

2 years ago
in செய்திகள்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடமேல் மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

அம்பாறை மற்றும் வதுளை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி
செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
Next Post
தொடரும் ஒலிம்பிக்கு எதிரான சதி!

தொடரும் ஒலிம்பிக்கு எதிரான சதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.