கின்னஸ் சாதனைக்காக யாழ்ப்பாணம் சென்ற இரு மலையக இளைஞர்களிடம் யாழ.பொலிஸார் மோசமான முறையில் நடந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொகவந்தலாவை, கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், உலக சாதனை படைக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் கோட்டையிலிருந்து காலி கோட்டை வரையில் தொடர் நடைபவனியாக செல்ல தயாராகியுள்ளனர்.
இதற்காக நேற்று(13.06.2023) யாழ்ப்பாணம் சென்ற இரு இளைஞர்களிடம்,பொலிஸார் மோசமான வார்த்தைகளினால் பேசி சட்டையை பிடித்து துரத்தியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரடப்பட்டு வருகின்றன.