கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நொச்சியாகம பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ள நிலையில், இந்த விபத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவியே முகங்கொடுத்துள்ளனர்.