மட்டக்களப்பு காத்தான்குடியில் ‘போதைக்கு எதிரான இளைஞர் நாம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (31) நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலாநிதி கே.அஜித் ரோஹன, கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க, மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இதன்போது அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.