இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரீ20 போட்டியின் போது மதீஷ பத்திரனவிற்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினாலும் அவரைத் தொடர்ந்து, தில்ஷான் மதுஷங்கவிற்கு பயிற்சி அமர்வின் போது தொடை தசையில் ஏற்பட்ட காயத்தினாலும் அவர்கள் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.