Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்ப் பொது வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம்; விக்கினேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு!

தமிழ்ப் பொது வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம்; விக்கினேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு!

9 months ago
in அரசியல், செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளரை இரவு பகலாக தேடி வருகின்றோம் இந்த வரத்திற்குள் வேட்பாளரை தெரிவு செய்து விடுவோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (31) நடாத்திய ஊடக சந்திப்பின் போது பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தபடுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்வதற்காக அல்ல. இதில் ரணிலுக்காக என்று கூறுவது முற்றிலும் தவறானது.

உண்மையில் எமது தமிழ் மக்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இதில் பொது வேட்பாளர் தேர்வில் பலருடைய பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒருவரை தேர்வு செய்வதென்றால் மாறி மாறி குற்றசாட்டுகள் சொல்லி வருகிற நிலைமை உள்ளது.

அதிலும் ஏதாவது ஒரு விதத்தில் தான் நினைக்கிற ஒருவர் தான் பொது வேட்பாளராக வர வேண்டுமென யோசிக்கிறவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மிடுக்கோடு பேசுகிறவர்களாக இருக்கிற நிலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சற்று தாமதமாகிறது.

மேலும், இவர்கள் ஒருவரை சுட்டிக்காட்டி அவரை இழைத்தால் அவர் தான் வரமாட்டேன் என கூறுகிற நிலைமையும் உள்ளது.

உண்மையில் ஒருவரை தெரிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அனேகமாக இந்த வாரத்திற்குள் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து விடுவோம்.

இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் ஏதும் இல்லை. இந்திய தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது.

என்னுடன் இப்படிபட்ட விசயங்களை அவர்கள் கதைப்பது குறைவு. ஏதாவது கலாச்சாரம், இலக்கியம், சமயம் ரீதியாக தான் கதைப்பார்கள். இப்படிபட்ட விடையங்கள் குறைவு. அதனால் இதைப்பற்றி எனக்கு தெரியாது.

ஆனால் சுமந்திரன் தான் இப்ப பெரிய சத்தம் எல்லாம் போட்டு கொண்டிருக்கிறார். அதாவது தாங்கள் எப்படியாவது பொதுவேட்பாளர் நியமிப்பதை நிறுத்துவோம் என்றும் தங்களை துரோகி என்று சொன்னாலும் பயப்பிமாட்டோம் என்றெல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறார்.

இதனைவிட தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறுஅழுத்தங்கள் வரவில்லை. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடைய ஒருவிதமான அச்சமும் பயமும் அருவருப்பும் வந்திருப்பதாக தெரிகிறது என்றார்.

Tags: BattinaathamnewsC.V.VikineswaranSrilankasrilankanewsசி.வி.விக்கினேஸ்வரன்தமிழ்ப்பொதுவேட்பாளர்

தொடர்புடையசெய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

May 12, 2025
இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்
செய்திகள்

இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

May 12, 2025
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை
செய்திகள்

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை

May 12, 2025
ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் சூளுரை
அரசியல்

ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் சூளுரை

May 12, 2025
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு

May 12, 2025
வெசாக் அலங்காரம் செய்த செய்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
செய்திகள்

வெசாக் அலங்காரம் செய்த செய்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

May 12, 2025
Next Post
இலங்கையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான சட்டவிரோத கருக்கலைப்புகள் பதிவு!

இலங்கையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான சட்டவிரோத கருக்கலைப்புகள் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு