சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை இன்று (2) அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 10 மனித உரிமைகள் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.