கம்பஹா, கெடவல நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் சிலருடன் சேர்ந்து கெடவல பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டில் நீராடச் சென்ற போது, அந்த இளைஞன் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.