இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக அடித்து துன்புறுத்திய கணவர் உட்பட 17 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் குறித்த பெண், கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய காதலரை நேரில் சென்று பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் கடும் கோபம் அடைந்திருக்கிறார்.
அந்த பெண்ணை நடுரோட்டில் அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் உட்பட 17 பேர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்துள்ளார்.
உடனே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. அந்த வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடுமையான குற்றம் நடந்துள்ளது. இதேதான் மணிப்பூரிலும் நடந்தது. இத்தகைய குற்றங்கள் பெண்களை பாதிக்கும்.
இதனால் இது தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தெய்வமாக பாவிக்கப்படும் பெண்களுக்கு தொடர்ந்து இத்தகைய பாதக செயல் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.