கம்பஹாவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு தம்மிட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று 06ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் உடுகம்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.