தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தம்மிக்க பெரேரா எம்.பி, பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடுவாரென இன்று ( 07) உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் வரை தம்மிக்க மொட்டுக்கட்சியோடு தான் இருந்தார்.ஆனால் நேற்று அதிகாலைக்குள் மனம் மாறி அவர் கடிதமொன்றை அனுப்பி போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
தம்மிக்கவின் பின்வாங்கலால் நிலைகுலைந்து போன மொட்டுக்கட்சி தேர்தல் செலவுகளையெல்லாம் தம்மிக்கவை வைத்து செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில், வேறு வழியின்றி நாமல் ராஜபக்சவை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கும் மொட்டுக்கட்சிக்குமிடையில் நல்ல உறவு இருந்தாலும் ரணிலுக்கும் நாமலுக்குமிடையில் இருந்த நல்ல உறவு சீர்கெட்டுப் போய்விட்டதாக கூறப்படுகிறது.
கடந்தவாரம் நாமலின் தொலைபேசி அழைப்பொன்றையே பதிலளிக்காமல் புறக்கணித்தார் ரணில் என்றும், நேற்று காலை தம்மிக்க பெரேரா ராஜபக்சக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
”நீ படித்த ஸ்கூலில் ஹெட்மாஸ்டர் நானடா என்று நாமலுக்கு சொல்லாமல் சொல்லியுள்ளார் ரணில் என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களும், மறுபக்கம் நாமல் அரசியலில் அவசரப்பட்டுவிட்டார் என தோன்றுகின்றது என்று சில சமூகஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கு காரணம் சிங்கள வாக்குகளை உடைத்து ரணிலை வீழ்த்த நினைத்தாலும் அது இலேசான விடயமல்ல. ஏன்னென்றால் மொட்டுக்கட்சியின் சில மாவட்ட அமைப்பாளர்கள் இப்போது ரணில் பக்கம் சென்றுள்ளதே காரணம்.
அதேசமயம் “நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?
அறுபதை இருபது வெல்லுமா உலகிலே?” என்று இப்படியும் சில பாடல்வரிகளை பதிவிட்டு முகநூல் பதிவுகள் வந்த வண்ணம் உள்ளது.