Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதியோர்களுக்கு வழங்கப்படும் 15% வட்டிவீதம் தொடர்பில் சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

முதியோர்களுக்கு வழங்கப்படும் 15% வட்டிவீதம் தொடர்பில் சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டி வீதத்தை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் பல தடவைகள் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அதனை வழங்க தவறி இருக்கிறது.

அதனால் அரசாங்கம் இவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட 15வீத வட்டி வீதத்தை குறைத்து அதனை 7.15வீதம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

2016இல் இருந்து 2020வரை இதனை செயற்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் இந்த வட்டி வீதத்தை மீண்டும் 15வீதமாக அதிகரி்த்துக்கொடுக்க அரசாங்கம் தவறி இருக்கிறது.

முதியோர்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கப்பெறும் வட்டியை கொண்டே தங்களின் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். அவர்களின் இந்த 15வீத வட்டி வீதத்தை வழங்குவதாக அரசாங்கம் இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருக்கிறது.

ஆனால் செயற்படுத்துவதில்லை. அமைச்சர் ஒருவர் இந்த சபையில் பொறுப்புடன் ஒரு விடயத்தை தெரிவித்தால், அதனை செயற்படுத்த வேண்டும்.

அத்துடன் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் முதலாவதாக எடுத்த தீர்மானம், ஒரு இலட்சத்தி 21ஆயிரம் ஓய்வூதியர்களின் வட்டி வீதத்தை 2016இல் இருந்து 2020வரை குறைப்பதாகும்.

இந்த ஓய்வூதியர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை.

அதேபோன்று கிராம சேவகர்களின் சேவை பிரமாணக்குறிப்பு மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த சபையில் தொடர்ந்து தெரிவித்து வந்தேன்.

கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த சேவை பிரமாணக்குறிப்புக்கு பதிலாக அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு தேவையான சேவை பிரமாணக்குறிப்பையே அனுமதித்துக்கொள்ள அனுப்பப்பட்டிருக்கிறது.

அமைச்சர்கள் இந்த சபையில் அனைத்துக்கும் இணக்கம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவற்றை செயற்படுத்துவதில்லை. அதனால் ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
தேசிய பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

தேசிய பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.