Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இடிக்கப்பட்ட மதில்; வெளியான காரணம்!

யாழில் இடிக்கப்பட்ட மதில்; வெளியான காரணம்!

2 years ago
in செய்திகள்

வடமராட்சி பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி முறைகேடாகக் கட்டப்பட்டு வந்த மதில்கள் நேற்றையதினம் (07) பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் காவல்துறையினர் பிரசன்னத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி பிரதேச சபை) எல்லைக்கு உட்பட்ட நெல்லியடி நகரம், கரணவாய் வடக்கு ஆகிய பிரதேசங்களில் இருவேறு காணி உரிமையாளர்களால் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி தொடர்ந்தும் கட்டப்பட்டு வந்த மதில்களே இடித்து அகற்றப்பட்டுள்ளன.

கரணவாய் வடக்கு நவிண்டில் பிரதேசத்தில் உள்ள மதிலொன்றும் நெல்லியடி நகர பேருந்து தரிப்பிடத்தின் பின்னால் உள்ள வீடொன்றின் மதிலுமே இவ்வாறு இடித்து அகற்றப்பட்டது.

சமீப காலமாக அனுமதி பெறாமல் கட்டடங்கள், மதில்கள் கட்டப்பட்டு வருகின்றமை அதிகரித்து வருவதாகவும், இதனால் இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் பிரதேச சபையிடம் முறையிட்டு வந்தனர்.

இது தொடர்பில் பிரதேச சபையினரால் கடந்த ஒரு வருடமாக சம்பந்தபட்டவர்களுக்கு நேரடியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு பல்வேறு கடிதங்களும் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் அவற்றை மீறித் தொடர்ந்து முறைகேடான விதத்திலும் மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொது வீதிகளை ஆக்கிரமிக்கும் வண்ணமும் குறித்த மதில்கள் கட்டப்பட்ட காரணத்தினால் இவை இடித்து அகற்றப்பட்டதாக பிரதேச சபைத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
Next Post
இலங்கைக்கு வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இலங்கைக்கு வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு