இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், அவசரமாக இருந்தால் மட்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (ICAO) நியமங்களை பூர்த்தி செய்யும் புதிய இ-பாஸ்போர்ட் அறிமுகமானது உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலையை மேம்படுத்தும் என தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்ட புதிய இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் வெளியிடப்படும்.
இது நாட்டின் பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசையை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மேலும் தெரிவித்தார்.