நாடளாவிய ரீதியில் யானைகள் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டமானது எதிர்வரும் 17ம் திகதி தொடங்கி மூன்று நாட்களுக்கு 3,130 கணக்கெடுப்பு மையங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் தரவு சேகரிப்பு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்களால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் பணியாளர்களை வரவழைக்க எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.திரு.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.எம்.ஜி.சி.சூரியபண்டார மேலும் தெரிவிக்கையில்,
பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் யானை இனத்தின் எதிர்கால இருப்பை முன்னறிவிப்பதற்கும், மனித-யானை மோதலை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்களை தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.