Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியரை நடுக்காட்டில் இறக்கி சென்ற அரச பேருந்து!

ஆசிரியரை நடுக்காட்டில் இறக்கி சென்ற அரச பேருந்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆசிரியர் தெரிவிக்கையில், நேற்றைய தின மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்து விட்டது.

அதை நன்கு அவதானித்த சாரதி பேருந்து நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச் சொன்னார்.

நான் அந்தப்பையை எடுக்கச் சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துப்பார்க்கிய நிலை ஏற்பட்டது.

அதிக பேருந்து வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இப்பாதையில் அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்.

இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேருந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
மா ஓயாவை கடக்க முயன்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மா ஓயாவை கடக்க முயன்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு