Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருச்சி சிறைச்சாலையிலிருந்த முல்லைத்தீவு நபர் தப்பியோட்டம்!

திருச்சி சிறைச்சாலையிலிருந்த முல்லைத்தீவு நபர் தப்பியோட்டம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழ்நாடு திருச்சி சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் (14) சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இவ்வாறு தப்பிச்சென்றவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், நைஜீரிய கைதி ஒருவருடன் சிறையிலிருந்து தப்பிச்சென்ற போது பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டின் மண்டபம் துறைமுகத்தில் இருந்து மன்னார் பகுதிக்கு படகு மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபருக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, கடுமையான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவில் வைத்து, பலத்த பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது திருச்சி சிறையில் உள்ள சிறப்புப் பிரிவில் இலங்கை குற்றவாளிகள் 86 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வடக்கில் இருந்து இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags: BattinaathamnewsindianewsSrilankasrilankanewsதிருச்சி

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
ஜப்பானில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜப்பானில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு