பொலன்னறுவை, வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, பந்தனாகல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கைதியொருவரே தப்பிச் சென்றுள்ளார்.
தற்போது, வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 93 கைதிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற கைதியை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.