முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் விடுதலைப்புலிகள் யுத்தகாலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகித்து அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இன்று (16) இடம்பெற்றிருந்தது.
பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் முடிவில் எதுவும் கண்டுப்பிடிக்க முடியாதகாரணத்தால் தோண்டப்பட்ட இடங்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.