கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதிக்கு முன்பாக ஜா -எல நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 27 யுவதிகளைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை நடத்திய குற்றச்சாட்டில் 6 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (16-06-2023) நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய, இயங்கி வந்த சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் மற்றும் ஏக்கல, தடுகம, துடெல்ல வெலிகம்பிட்டிய ஆகிய இடங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த யுவதிகள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.