Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனமல்வில மாணவி துஷ்பிரயோக விவகாரம்; சட்ட வைத்திய அதிகாரி கைது!

தனமல்வில மாணவி துஷ்பிரயோக விவகாரம்; சட்ட வைத்திய அதிகாரி கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

16 வயதுடைய பாடசாலை மாணவியை 22 மாணவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளை பரிசோதித்தபோது குறித்த ஹம்பாந்தோட்டை வைத்திய அதிகாரி திட்டியதாகவும், மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும், குறித்த சிறுமியின் தாய் கடந்த வாரம் தனமல்வில பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஜே.எம்.ஓ.வின் நடவடிக்கையின் பிறகு தனது மகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமி பொய் சொன்னதாக குறித்த அதிகாரி குற்றம் சாட்டியதாகவும் சிறுமியின் தாய் கூறினார்.

இதனையடுத்து குறித்த சட்ட வைத்திய அதிகாரி நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 300,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, சம்பவத்தில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலும், சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!
செய்திகள்

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

July 21, 2026
Next Post
பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடினார் எலான் மஸ்க்!

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடினார் எலான் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு