மட்டு நகர்புறத்திலுள்ள கோவிந்தன் வீதியில் அரச பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி, மதிலை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவமானது மட்டக்களப்பு புது பாலம் அருகிலுள்ள வளைவின் அருகாமையில் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தானது பேருந்தின் திசை மாற்றி லொக் ( Steering Lock ) ஆனதினாலேயே இடம்பெற்றது என குறித்த பேருந்தின் சாரதி தகவல் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதுடன், பேருந்துக்கும்,மதிலுக்கும் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.