நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தங்களது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு தேவைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த அறிவிப்பானது, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டங்களும் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி மாத்திரம் நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.