இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குறித்த தகவலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றையதினம் (19) வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான பட்டியலை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருகிறதாக கூறப்படுகிறது.
மேலும், 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.