நாடாளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று (21) காலை இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மனுஷ நாணயக்காரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதால் அவருடைய வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொட சத்தியப்பிரமாணம் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் கடந்த 09 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அமைச்சர்களான மனுஷ மற்றும் ஹரின் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2020 பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்தமையால் இந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.