இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றின் பின்பக்க ஜோடி டயர்கள், பஸ்ஸை விட்டுவிட்டு 100 அடி தூரத்துக்கு உருண்டோடியதுடன், டயர் இல்லாமல் பஸ் முன்பாக பஸ் சுமார் 50 அடி தூரம் வரை பயணித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளை ஸ்பிரிங்வலி வீதியி ல், பதுளை நோக்கிச் இன்று (22) பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றின் பின்பக்க ஜோடி டயர்கள் கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
டயர்கள் கழன்றதன் பின்னர் பஸ் சுமார் 50 அடி தூரம் பஸ் ஓடி நடுரோட்டில் நின்றுள்ளது. கழன்ற டயர் ஜோடிகள் சுமார் 100 அடி தூரம் வரை ஓடி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தால், அவ்வழியான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், விபத்து இடம்பெற்றபோது, அந்த பஸ்ஸில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.