கொழும்பிலுள்ள உற்பத்தி நிலையமொன்றுக்கு இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்ட பரிசுப் பொதியொன்றிலிருந்து 21 கோடி ரூபா பெறுமதியான 30 கிலோகிராம் ஹசீஸ் போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
மேற்படி போதைப்பொருளின் பெறுமதி 212 மில்லியன் ரூபா. அதாவது, ரூ.21 கோடிக்கும் அதிகமாகும் என்பதுடன் இப்போதைப்பொருள் மத்துகமை பிரதேச முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளுடன் இதுதொடர்புடைய சந்தேகநபரொருவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்