மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 250 லீற்றர் கசிப்புடன் 22 பேரும், ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவருமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார்.
காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, நாவற்குடா உட்பட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்பலா பிரதேசத்தில் வைத்து ஹசீஸ் போதை பொருளுடன் 63 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.