Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்; வெளியான தகவல்!

நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்; வெளியான தகவல்!

2 years ago
in செய்திகள்

தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியர் வண்டியில் இருந்து குதித்த நிலையில், அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர், குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்டுள்ளது.

அப்போது நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்ககளும், நோயாளர் காவு வண்டியும் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
பொறுப்புகளிலிருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர் பியல்!

பொறுப்புகளிலிருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர் பியல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.