சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 58 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், இரண்டு சீனப் பிரஜைகளும், இரண்டு இலங்கையர்களும் , இந்தியப் பிரஜை ஒருவரும் அடங்குகின்றனர்.
சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், விஸ்கி போத்தல்கள் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் தலா மூன்று இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.