மஹா கிரிந்த பிரதேசத்தில் இருந்து கிரில்ல வைத்தியசாலைக்கு சென்று வந்த நபர் ஒருவர் நெடுஞ்சாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி மீண்டும் வைத்தியசாலையில் மருந்தை எடுத்து வீடு திரும்பும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹா கிரிந்த மொன்னகலம முகவரியைச் சேர்ந்த எச்.எம்.ஏ.கபுருபண்டா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நோய்வாய்ப்பட்ட மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.