கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தமையினால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.