கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (23-06-2023) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நபர் குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தை நடத்தி வந்தவர் என தெரியவந்துள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் வீட்டு வாசலில் வைத்துக் கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்தனர்.