இலங்கையில் தற்போது பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.