Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(04) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாகவும், தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் ஆரம்பமானது.

மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றதனைத் தொடர்ந்து, கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன், பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கின் தேரோடும் கோயில் என்னும் பெருமையினையும் கொண்ட ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி நடைபெறவுள்ளதுடன் 23ம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
முப்படைகளுக்குக்கான சம்பளம் அதிகரிக்கப்படுகிறது!

முப்படைகளுக்குக்கான சம்பளம் அதிகரிக்கப்படுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு