Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் அகுங்கல,நெலுவ மற்றும் யால போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
Next Post
கிளிநொச்சி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இளைஞன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு