மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் தென்னை மரங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாந்தீவு ஆற்றின் ஊடாக திருப்பெருந்துறை பகுதிக்குள் நேற்று (05) வியாழக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன.
மூன்று தினங்களாக யானைகளின் தொல்லை இருப்பதாகவும், இதற்கு உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறும் பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.